நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் -8 ஆண்கள் ,2 பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  தேனி

By Fahad | Published: Apr 01 2020 10:42 AM

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும்  சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடியினர் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்கள்.இதுவரை 12 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியுள்ளது.         தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.இதில் 2 பெண்களும் அடங்குவார்கள்.இதில் உள்ளவர்களின் பெயர் ,வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல் தெரிந்தால் உடனடியாக சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 9443884395 என்ற  செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

More News From NEET scam