சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் […]
அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் […]
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும் என திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் […]
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில், சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், […]
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்தால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் பெரும்பான்மை இழக்கும் என கூறப்படுகிறது. சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா […]
சிபிஎஸ்இ பாடநூலில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் […]
புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தொடர்ந்து 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வாய்க்காலின் அருகே உள்ள வீட்டில் ஹசீனா பேகம் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார். தற்பொழுது புதுச்சேரியில் பலத்த மழை […]
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை தொடர் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்நரின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக […]
திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது. திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை மத்தியில் பேசிய, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆட்சி முடியப்போகிறது கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளைதிறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும், ஆட்சி முடிவதற்குள் திட்டங்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் முதல்வர் பின்னாடி நடந்து […]
முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக […]
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், […]
தென் மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து காங்கிரஸ் சார்பாக அவ்வப்போது பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், பிப். 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நெல்லை, தேனி, நீலகிரி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல்ஹாசன் அதிருப்தி. சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு, எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் 10 மணிக்கு தொடங்கி இருக்க வேண்டிய நிகழ்ச்சி 2 மணிநேரம் தமதமாகியும் தொடங்கவில்லை. நான்காம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கேரவன் […]
அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளார். டிடிவி தினகரனின் பேச்சும் அப்படித்தான் என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே […]
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. […]
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் […]
உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர் முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது […]
கலைமாமணி விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழக அரசானது திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அதன்படி, 2019-20-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெயர் இடம்பிடித்திருந்தது. இதற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் […]