தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஏ.ஆர்.ரகுமான் ட்வீட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ஆற்றல் […]
ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தல். ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, […]
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா கலந்து கொண்டு விளையாடினார். குரூப் ஏ பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். 7.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். கடைசிச் சுற்றில் இந்திய வீரர் பிரனீத்தைத் தோற்கடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து […]
பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட். அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகள்,கல்லூரிகளில் மாணவிகளைப்.பாதுகாக்க வேண்டிய […]
திமுக ஐந்து வருடம் அல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டூர் பகுதி தொகுதியில் திமுக சார்பில் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கலைஞர் அவர்கள் எந்த திட்டத்தை தொடங்கினாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். அதேபோல் முன்னாள் முதல்வர் […]
புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், […]
இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம் […]
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் […]
சென்னை,பிராட்வே பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மறைந்த டிராபிக் ராமசாமி முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,மாற்று இடம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய […]
ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில்,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன்,ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் இடம்பெற்றுள்ளனர். தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் […]
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி எனவும், பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை இனியும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து குறிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: “குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்;குழந்தைப் பருவம் […]
நாமக்கலில் கடந்த புதன்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதுக்கு தலைமை தாங்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டார்”,என்ற தவறான தகவலை கூறிய நிலையில்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து,அண்ணாமலையில் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆற்காடு வீராசாமி அவர்களின் மகனுமான கலாநிதி வீராசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,584 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் ஆக 8,329 அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,13,435 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆக பதிவாகியுள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,757 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 4,216 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் […]
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை […]
இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னைவாசி மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று (ஜூன் 11-ஆம் தேதி) முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.