இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா என ராதாரவி பேச்சு. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், அண்ணாமலை பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவோ திமுகவோ என்னும் நிலை வரும். 2024 ஆம் […]
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு […]
வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த […]
2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி. கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார், சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் அணுகு முறையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய […]
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் பாஜக எம்எல்ஏ […]
அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என கி.வீரமணி பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திராவிட கழக தலைவர் கே.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பொன்விழாவை அவர்கள் கொண்டாட வேண்டிய காலகட்டத்தில் புண்விழாவாக அதை மாற்றி கொண்டு, பல குழுக்களாக பிரிந்துள்ளனர். பாஜகவுடன் […]
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், வணிக […]
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை,வார்டு கமிட்டி ஆகியவை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும்.இதற்கு தலைவராக அப்பகுதி வார்டு கவுன்சிலர் இருப்பார் எனவும்,3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு,3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஏரியா சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு குறைகளை […]
வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின் ஆகியோர் தமிழக டிஜிபி அவர்களிடம் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:”சட்ட ரீதியாக அதிமுக பொதுக்குழு […]
மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, சிறையில் இருந்த போது காவல்துறையின் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினேன் என முதல்வர் பேச்சு. சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில கல்லூரியின் அரசியல் அறிவியல் படித்தேன். மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, […]
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் […]
தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும்,ஓபிஎஸ் […]
டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் என ஜெயக்குமார் பேட்டி. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால், ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் மருது அழகுராஜ். அவர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள். இவங்கலாம் வேலைக்கு […]
எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்க்கப்பட்டுள்ளது. கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பேனா காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து […]
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.இதனை முன்னிட்டு,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும்,எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து,அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதே சமயம்,தற்போதைய துணைக் குடியரசுத்தலைவராகவுள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் […]
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட். கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமலஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், பாஜக எம்எல்ஏவும் வானதி சீனிவாசன் அவர்களும் விக்ரம் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. […]