10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் நபர். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்பது பழமொழி. ஆனால், இதனை பலர் தங்களது வாழ்க்கையில் நடைமுறைபடுத்தி வருகின்றனர். தனால், ஒரு ஏழையின் பசி ஆற்றப்படும் போது, அந்த திருப்தியில் மகிழ்ச்சி கொள்பவர்கள் பலர் உண்டு. அந்த வகையில், ஐதராபாத்தில், ஆசிப் உசைன் சோஹைல் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றி ஏழைகளுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறார். இவர் 2010-ம் ஆண்டு மறைந்த […]
லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலைமை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து அதன் நிகர மதிப்பைக் குறைத்து வருவதால் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் , உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியுள்ளது .காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த […]
புதிய கல்வி கொள்கை இந்தியாவை வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அகர்த்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 13 வது மாநாட்டில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, புதிய கல்விக் கொள்கை (என்இபி) உலகளவில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் நாடு மீண்டும் உலகளாவிய ஆசிரியராக மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று துணைத் குடியரசுதலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். எங்கள் கல்வி நடைமுறை, […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் வாங்கி கணக்கை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து வகையான வங்கிகள் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி பலரும் தங்களின் இணைக்கத் தொடங்கினார்கள். இதுவே நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால், உங்கள் கணக்கை ஆதார் […]
ராஜஸ்தான் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார் . ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் . சுரு மாவட்டத்தின் சுஜன்கர் சட்டமன்ற தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்திய முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மேக்வாலுக்கு இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது . அதனையடுத்து குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பன்வர் லால் . கடந்த ஐந்து முறை எம்எல்ஏ-ஆக இருந்த […]
திருமணத்திற்காக காதலனிடம் 11.5 லட்சம் காதலி கொடுத்துவைக்க, மொத்தமாக சுருட்டிவிட்டு ஊருக்கு கிளம்பிய காதலன் காதலன் மீது புகார் கொடுத்துள்ள காதலி. பீகாரை சேர்ந்த 31 வயதுடைய இந்திரன் தத்தா என்பவர் மேற்கு வங்காளத்தில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூர் சென்றிருந்த பொழுது பெண் ஒருவரை சந்தித்து இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரி பருவம் முதல் ஒன்றாக ஊர் சுற்றி பல வருடம் காதலித்து வந்துள்ளனர். தத்தா என்னும் அந்த ஆண் தான் […]
டெல்லிக்கு அனுப்பப்படும் 75 மருத்துவர்கள், 250 துணை மருத்துவர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், டெல்லி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 75 மருத்துவர்கள் மற்றும் 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு சென்று […]
பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கபில் சிபல், மக்களால் பாஜகவிற்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்களும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கான பதில் தெரியும். ஆனால், அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இந்நிலையில், கபில் சிபலின் […]
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்குபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17-ஆம் தேதி […]
கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்கலாம். 2020 ஆம் ஆண்டு துவங்கியது முதலே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் படிப்பு கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக நடத்தி வந்த பாடங்கள் தற்பொழுது நேரில் கல்லூரிகளுக்கு சென்று […]
நேற்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் ( Vikassheel Insaan Party ),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ( Hindustani Awam Morcha ) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே 3 […]
தன் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர். பெங்களூருவில் உள்ள ப்லூருவில் பெஸ்காமில் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய நபர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். எனவே அவரது மனைவியின் சகோதரி ஆகிய ஸ்ரேயாசி பானர்ஜி எனும் பெண் அந்த நபர் மீது வரதட்சனை துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது ஏற்கனவே பகையுடன் இருந்த மைதுனராகிய […]
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் புதிதாக நேற்று ஒரே நாளில் 28,555 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய தினங்களை கணக்கிடுகையில் மிகக் குறைவான அளவிலேயே […]
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3ஆம் கட்டம் சோதனை தொடங்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ இப்போது 3ஆம் கட்டதிற்கு செல்கிறது என்று பாரத் பயோடெக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லாநேற்று தெரிவித்தார். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்த நிறுவனம்,கொரோனாவுக்கான மற்றொரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, இது மூக்கு மூலம் செலுத்தபடும் என்றும் இது அடுத்த ஆண்டுக்குள் தயாராக வாய்ப்புவுள்ளது என்று […]
தக்காளியுடன் வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வாளையார் பகுதியில் கேரள பேர் சிக்கி 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு தக்காளிகளை கொண்ட பெட்டிகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது . அதனையடுத்து லாரி பாலக்காட்டின் வாளையாரில் வந்த போது , நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லாரியையும் நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது லாரிக்குள் இருந்த தக்காளி பெட்டிகளுக்கு […]
கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சத்யதேவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் இருந்துதகவல் வெளியாகி உள்ளது.
பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை […]
ரஷ்யா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது . தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றது . ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு […]
ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியனின் அடையாளம் ஆதார்: நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. PVC ஆதார்: […]