சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள முதல்வர் பதவிக்கு கடும் போட்டி […]
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு. என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பதாகவே, மார்ச்-3ம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காலியான பணியிடத்துக்கு, துணை ஆளுநரை நியமிப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது. இவர்களுக்கு, வரும் 23-ம் தேதி காணொளி வாயிலாக நேர்முகத்தேர்வு […]
தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மனிதர்கள் மீதான கொரானா தடுப்பூசி பரிசோதனையை ஜூலை 13 முதல் 18 வரை நடைமுறைப்படுத்தவுள்ளது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் மருந்துகள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. இதனை வைத்து விலங்குகளிடம் சோதனை நடைபெற்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்பொழுது 18 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனை […]
கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா […]
பத்மநாபசாமி கோவிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு, நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று அளித்த தீர்ப்புக்கு எதிராக, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி […]
2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண். இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சண்டிகரில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தை சேர்ந்த நரேஷ் என்பவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் அந்த பெண்ணிடம் நரேஷ் 2000 ரூபாய் கேட்டுள்ளார். இல்லை என தர மறுத்த பெண்ணின் மேல் சானிடைசரை ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து எரிக்க […]
பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் . இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கிலிடப்பட்டார் என்று எம்.எல்.ஏ.வின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.78 லட்சமாக உயர்ந்துள்ளது.,மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,49,553லிருந்து 8,78,254ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,621லிருந்து 5,53,471ஆக உயர்ந்துள்ளதாகவும்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674லிருந்து 23,174ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 684 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண […]
இந்தியாவில் 879,466 பேருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்நது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,036,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 571,574 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 879,466 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 554,429 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை முதல் வாரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தியதில் மரணங்கள் இல்லை என பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், டெல்லியில் தினமும் உள்ள இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து இறப்புகளையும் கடந்த பதினைந்து நாட்களில் ஆய்வு செய்யுமாறு டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனால் உயிரிழப்புகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைப் புரிந்து […]
கொரோனா தடுப்பூசி மருந்தை முதன் முதலாக மனிதர்களிடம் செலுத்தும் திட்டத்தில் நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளேன் என்று இளம் ஆசிரிய இளைஞர் தெரிவித்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். உலகில் மிக கொடூரமாக கொரோனா பரவி வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.இரு மடங்காக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு சற்று கவலை அளிக்கும் விதத்திலே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி மருந்தை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் கண்டுபிடித்தது.முதலில் […]
கற்பழிப்பு குற்றவாளிக்கு போலிச்சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மருத்துவர் கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவரை டெல்லி மருத்துவர்கள் கவுன்சில் இவரை நவம்பர் மாதம் வரையில் மருத்துவத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. டெல்லியில் உள்ள பங்கா சாலையில் வசிக்கும் முகேஷ் சங்வான் (38) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் கிடைப்பதற்காக உத்தம் நகரில் வசிக்கும் கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவர் போலி […]
கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் உறவினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற அவலம் சம்பவத்தால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் […]
இன்று சோப்பூர் நகரில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சோபூர் நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சோபூர் மாவட்டத்தின் ரெபன் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததாக போலீசார் […]
தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில ஆளுநருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. தெலுங்கானாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரையும் தாக்கும் கொரோனா, ஆளுநர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.54 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,54,427 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே […]
டெல்லியில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,12,494 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,12,494 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,276 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,968 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 79.97 சதவீதமாக அதிகரித்தது. மேலும், […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 435 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 435 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,874 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு மருத்துவமனையில் 3,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,097 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் […]