தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் […]
நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் […]
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர். புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு […]
பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு டிஜிபி ரமேஷ் தாஸ் என்பவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார்.பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் […]
ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு இன்று தான் சசிகலா ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதனிடையே இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சமத்துவ மக்கள் […]
பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக காவல்துறை சிறப்பு DGP ராஜேஸ்தாஸை முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. திரு. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் […]
3 ஆம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் […]
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக […]
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு தயாராகும் […]
அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் […]
திண்டுக்கல்லில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான கல்யாண பரிசாக பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் வழங்கினார்கள். அண்மை காலமாக பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே வேளையில் மறுப்புறம் வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.இது மேலும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கோவிந்தராஜ் மற்றும் வினோதினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.திருமண விழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு […]
விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனால் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார் சசிகலா. மரியாதையை செலுத்திய பின் சசிகலா பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச்சென்றதே நம்முடைய இலக்கு. நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள், நானும் துணையிருப்பேன்.விரைவில் நான் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன்.ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து […]
எடப்பாடி தொகுதிக்கு முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்வரும் இன்றே விருப்ப மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் ‘டூல்கிட்’டை தயாரித்ததாக டெல்லி போலீசார் புகார் தெரிவித்தனர். திஷா ரவி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி போலீசார் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, திஷா ரவியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி […]
தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும்.கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த […]
தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .இத்திட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 – 22 நிதியாண்டில்,ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த கடன் அளவான ரூ.85,454 கோடியில் நிகர கடனாக ரூ.84,686.75 கோடி நிதி திரட்டப்படும்.தமிழக அரசின் கடன் சுமை 5,70,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.