நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் – இந்திய கூட்டணி எம்.பி-க்கள் இன்று ஆலோசனை..!

Two individuals jumped into lok sabha Parliment

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர்.  அப்போது அப்பெண் நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் … Read more

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்..! பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!

Baby

அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை … Read more

மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு

Tngovt

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் பின்வருமாறு வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.?  சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்  செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் … Read more

ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் தயார் – தமிழக அரசு

rn ravi

கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம். பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். … Read more

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் – ஈபிஎஸ் கண்டனம்

ADMK Chief secretary Edappadi Palanisamy

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். இந்த தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து … Read more

சிறையில் வீடியோ கால் வசதி – தமிழ்நாடு அரசு அரசாணை!

Tngovt

சிறைவாசிகளின் வசதிக்கேற்ப தொலைபேசி பேசும் கால அளவை அதிகரித்துள்ளதோடு, வீடியோ கால் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..! அந்த அரசாணையில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால … Read more

நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

rn ravi

கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.? பிரச்சனைக்கு தீர்வு … Read more

பெண்ணின் உச்சந்தலையில் வாழ்ந்த போட்ஃபிளை லார்வாக்கள்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

Larva

பெங்களூருவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயதான பெண் ஒருவர் ஒரு அரிதான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். இவர் ஒரு வனவிலங்கு பாதுகாவலர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு வார காலமாக வலி மற்றும் உச்சந்தலையில் ஒரு விசித்திரமான ஊர்ந்து செல்லும் உணர்வு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், பெங்களூரில் உள்ள ட்ரைலைஃப் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்..! அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் உச்சந்தலையில், லார்வாக்கள் … Read more

மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்..!

Mohan yadav

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச … Read more

சிறப்பு தடுப்பூசி முகாம் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ma.subramaniyan

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி  முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 … Read more