சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில், கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் நாளை (ஜூலை 1) முதல் சென்னையில் இவ்விரு நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவகங்களிடம் இருந்து சராசரியாக 30% வரை ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் கமிஷன் வசூலிப்பதாகவும், சற்று பெரிய உணவகமாக […]
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் […]
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என்றும், இதற்கு ராஜன் வகையறா என தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வடசென்னை உரிமை அவரிடம் உள்ளதால் ரூ.20 கோடி வரை கொடுத்து NOC சான்றிதழ் பெற வேண்டுமென அவர் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்த […]
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண […]
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த இளைஞரின் 17 வயது சகோதரனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் அஜித்குமார் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் காவல்துறையின் செயல்பாடுகள் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் வெளிப்படையான மற்றும் […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடந்த ஜூன் 25 அன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆர்.ஜி.கார் […]
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள். மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தியுள்னர். தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி, திருப்புவனம் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். […]
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இன்று (ஜூன் 29, 2025) ஜெகந்நாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை குண்டிச்சா கோயில் அருகே ஜெகன்நாதர் தேர் வந்தபோது| ஏற்பட்ட இந்த நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நெரிசலுக்குப் பிறகு, ஒடிசா அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் […]
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலாக உள்ளதாக வதந்திகள் பரவின. அதாவது, தமிழகத்தில் நாளை மறுநாள் […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் தலைமையில், கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் முகத் தசைகளை மீட்டமைத்து, உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி இந்த முகங்கள் உருவாக்கப்பட்டன. கொந்தகையில் 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, […]
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள் மூலம் அதற்கான விடை கிடைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3டி முறையில் பழங்கால தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்திருக்கிறது. 80% அறிவியல்பூர்வமாகவும், 20% கலைப்பூர்வமாகவும் அந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று அமைச்சர் தங்கம் […]
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா உறுதிப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த […]
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 பந்துகளில் சதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். நாட்டிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் அடிப்படையில் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து மகளிர் அணி 14.5 ஓவர்களில் […]