பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப இந்த தேதி தான் கடைசி..!கல்வித்துறை கரார்

பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப இந்த தேதி தான் கடைசி..!கல்வித்துறை கரார்

  • தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.
  • மாவட்ட முதன்மை  மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எல்லோரும் இந்த தேர்வானது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் பள்ளிகளில் பயிலும் 5ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறையின் தற்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.அதன்படி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு இந்த உத்தரவினை அறிவித்து கெடு வித்துள்ளது.அந்த கெடுவில் பொதுத்தேர்வு எழுதும் 5 வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை வருகின்ற 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!