திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த ஜொமாட்டோ இணை நிறுவனர்..!

திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த ஜொமாட்டோ இணை நிறுவனர்..!

ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாம்  வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதால் ஜொமாட்டோவில் இருந்து விலகுவதாக கவுரவ் குப்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

குப்தா 2015 இல் ஜோமாட்டோவில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, 2018 இல், அவர் தலைமை இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்குப் பிறகு, 2019 இல், அவருக்கு ஸோமாட்டோ நிறுவனர் அந்தஸ்து வழங்கப்பட்டது. கவுரவ் குப்தா ராஜினாமா செய்த செய்திக்கு பிறகு, நிறுவனத்தின் பங்குகள் மேல் மட்டத்தில் இருந்து ரூ.10 க்கும் மேல் சரிந்துள்ளது. முன்பு ரூ.151 இல் இருந்த பங்கு இப்போது ரூ .140 ஆக குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை ஜொமாட்டோ நிறுவனம் விரிவுபடுத்தியது. அதற்கு அப்போது நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த சேவை மந்தமானதால் டெலிவரி செய்யும் சேவையை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஜொமாட்டோ நிறுத்தப்படுவதாக  கடந்த வாரம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube