தமிழ்நாடு – கேரள எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை..!

தமிழ்நாடு – கேரள எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை..!

தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு அடுத்தப்படியாக ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாக்கிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் பரிசோதனை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் என்பதால் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது,

தமிழக-கேரள எல்லையில் உள்ள 2,660 வீடுகளுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வித பயணிகளுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. மேலும், பேருந்து, ரயில் மற்றும் லாரிகளில் வருபவர்களுக்கும் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube