கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு..!

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு..!

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, தடிப்பு போன்றவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. இதனால் இந்த நோய்த்தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது.

இது பற்றி கேரள சுகாதார துறை அதிகாரி வீனா ஜார்ஜ் தெரிவித்திருப்பதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் சிறியவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வயது 12, 17, 26, 37, 38 ஆகும். இதனால் ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8 பேர் இதுதொடர்பாக சிகிச்சையில் உள்ளனர், என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஜிகா வைரஸ் தொற்று பரிசோதனை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube