36 C
Chennai
Thursday, September 16, 2021

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ்..!மொத்த பாதிப்பு 38 ஆக உயர்வு..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது.  பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, தடிப்பு போன்றவை அறிகுறிகளாக ஏற்படுகிறது.

இதனால் இந்த நோய்த்தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தெரிவித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதில் தற்போது 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More