பேட்,பந்தை கொண்டு பாட்டில் சேலஞ்ச் செய்த யுவராஜ் !

சமூக வலைத்தளங்களில்  கடந்த தின நாள்களாக  “பாட்டில்  சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ  தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின்  என்பவர் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க  பராபி டாவ்லட்சின்  பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும் வேறு யாராவது இது போல செய்ய முடியுமா என சவால் விட அது தற்போது “பாட்டில்  சேலஞ்ச் ” மாறி சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. இந்த சேலஞ்ச்சை  பல சினிமா பிரபலங்கள்  ஏற்று செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் “பாட்டில்  சேலஞ்ச்சை ” ஏற்று செய்து உள்ளார். இதுவரை பாட்டில்  சேலஞ்ச்சை  செய்தவர்கள் அனைவருமே தங்கள் கால்களால் பாட்டிலில் மேல் உள்ள மூடியை எட்டி உதைத்து சேலஞ்ச்சை செய்து வந்தனர்.

ஆனால் யுவராஜ் சிங் கிரிக்கெட் வீரர் என்பதால் பேட் ,பந்தை  கொண்டு  “பாட்டில்  சேலஞ்ச்சை ” செய்து உள்ளார். தன் எதிரில் இருக்கும் பாட்டில் மூடியை பந்தை கொண்டு அடித்து இந்த சேலஞ்ச்சை செய்து உள்ளார்.