சஞ்சய் தத் விரைவில் குணமடைய யுவராஜ் சிங் ட்வீட்.!

சஞ்சய் தத் விரைவில் குணமடைய யுவராஜ் சிங் ட்வீட்.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டு வர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில்  ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2012ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புற்றுநோயில் இருந்து மீண்டு 2013 முதல் 2019ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக் கெட்டில் விளையாடினர்.

இந்நிலையில் புற்றுநோய் வலி எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியும், மேலும் நடிகர் சஞ்சய் தத் விரைவில் குணமாக யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் "இது ஏற்படுத்தும் வலி தனக்கு தெரியும் என்றும், ஆனால் நீங்கள் மிகவும் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்கள் உடல்நலத்துடன் மீண்டு வர கடவுளை பிராத்திக்கிறேன் என்றும் ட்வீட் செய்துள்ளார்.