ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் டோல் பூத் ஊழியரை அறையும் காட்சி வைரல்.!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தலைவர் டோல் பூத் ஊழியர்களை அச்சுறுத்தும் மற்றும் கன்னத்தில் அறைந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது, அதில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல் பூத்தை கடந்த செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரை டோல் பூத் ஊழியர் தடுத்து நிறுத்தி, அவரிடம் கட்டண வரி செலுத்தச் சொன்னபோது அவர் வரி செலுத்த மறுத்துவிட்டார்.

இதனால், தனது வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பை ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் டி ரேவதி கோபத்துடன் அகற்றுவதைக் பார்க்கலாம். இந்நிலையில்,  தடுப்பை அகற்ற வேண்டாம் என்று டோல் பூத் ஊழியர்கள் கூறியதும். தடுப்பை அகற்றுவதை நிறுத்தியபோது, ​​ரேவதி ஒரு டோல் பூத் அதிகாரியின் காலரைப் பிடித்து கன்னத்தில் அறைந்துள்ளார்.


அந்த வகையில், நாட்டில் ஒரு டோல் பூத்தில் தொழிலாளி மீது இது போன்ற தாக்குதல் முதல் முறை இல்ல. ஜூலை மாதம், உத்தரப்பிரதேசத்தின் தேசிய அதிவேக நெடுஞ்சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.