Connect with us

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45% வருவாய் வழங்குகிறது.

தொழில்நுட்பம்

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45% வருவாய் வழங்குகிறது.

பிரபல யூடியூப் (YouTube) நிறுவனம், ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு அதன் விளம்பர வருவாயில் 45% சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் (YouTube) நிறுவனம், அதன் வளர்ந்து வரும் ஒரு பகுதியான  ஷார்ட்ஸில் விளம்பரத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஷார்ட்ஸில், வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45 சதவீத வருவாய் அளிக்கவுள்ளது.

டிக்டாக் போன்று யூடியூப்பிலும் படைப்பாளிகள், குறுகிய அளவில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை யூடியூப் (YouTube) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் யூடியூப், ஷார்ட்ஸ் வீடியோ, மற்றும் நிமிட வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் 1.5 பில்லியன் மாத பயனர்களை ஈர்த்தது. கடந்த ஏப்ரலில் யூடியூப், ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளர்களைக் கவர $100 மில்லியன் நிதியை ஒதுக்கியது.

யூடியூப் ஆனது, இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்காக அதன் சிறு வறுவாயைப் ஷார்ட்ஸ் வீடியோ படைப்பாளர்களுக்காக வழங்குவதாக அதன் துணைத் தலைவர் தாரா வால்பர்ட் லெவி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தொழில்நுட்பம்

To Top