வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை - முன்பதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ!

மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட

By Rebekal | Published: Jul 16, 2020 05:10 PM

மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள்தான் ஷோபனா. இவரது கணவர் விஜயகுமார், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்து உள்ளது. ஆனால் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மன அழுத்தத்திலிருந்த இவர்  தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

 ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எவ்வளவு நகை போட்டு வந்திருந்தாலும் எனது மாமியாரென்னை வரதட்சணை கொடுமை செய்கிறார். எனது பிள்ளைகளை மட்டும் பார்த்து கொள்ளுங்கள் இதுவே என் ஆசை என கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc