பசித்தோரின் பசியாற வாழைத்தார்களை கட்டி தொங்கவிடும் இளைஞர்கள்! குவியும் பாராட்டுக்கள் !

நெல்லையில் ஏழை மக்களின் பசியாற்ற, கடையில் வாழைத்தார்களை கட்டி தொங்கவிட்ட இளைஞர்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெருவோரங்களில் ஆதரவின்றி திரிவோர் அதிகமானோர் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லையில், கொங்கந்தான்பாறை கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பசியாற வாழைப்பழ தார்களை ஒரு கடை முன்பு கட்டி வைத்திருக்கின்றனர். ஏழை மக்கள், முதியவர்கள் தினமும் கடைக்கு வந்து பசியாறி செல்கின்றனர்.

இளைஞர்களின் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவர்களின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.