வயிறுவலி என்று ஸ்கேன் செய்த இளைஞர்! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உத்திரபிரதேசத்தில் உன்னாவோவில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் கரண் என்ற 18 வயது இளைஞர், அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சையில் கூர்மையான ஸ்கூட்ரைவர்கள், 30 நகங்கள், கரடுமுரடான கம்பிகள், 4 தையல் ஊசிகள் போன்றவை வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரணின் தந்தை அவர்கள் கூறுகையில், ‘கரண் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான். ஆனால், இத்தனை பொருட்களை எப்போது விழுங்கினான் என்று தெரிவில்லை எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய மருத்துவர்கள், ‘இளைஞருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அவரிடம் எப்படி இத்தனை பொருட்கள் உள்ளேபோனது? என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. மேலும், இவர் ஏழு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.