புடவை அணிந்ததால் இளம்பெண் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.., வைரல் வீடியோ ..!

டெல்லி உள்ள உணவகத்திற்குள் புடவை அணிந்ததால் இளம்பெண் நுழைய அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது.

மரியாதைக்குரிய உடைகள் என்று நம் நாட்டில் முதலில் சொல்லப்படுவது ஆண்களுக்கு பேன்ட், சட்டை மற்றும் பெண்களுக்கு புடவை. இந்திய பெண்கள் அணியும் பாரம்பரிய உடை தான் புடைவை. டெல்லியில் ஒரு உணவகம் சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதில், பாரம்பரிய உடைகள் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் விதித்த விதிமுறைகள் பட்டியலில் பாரம்பரிய உடையின் கீழ் புடவை இல்லை. அதுவே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளம் பெண் விதிமுறைகளை வகுத்துள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, நுழைவாயிலில் உள்ள பெண் ஹோட்டல் ஊழியர் புடவை அணிந்து வர அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

உடனே அந்த பெண் ஏன் புடவை அணிய அனுமதிக்கப்படவில்லை என்றுபெண் ஹோட்டல் ஊழியரிடம் கேட்க “நாங்கள் ஸ்மார்ட் கேஷுவல்  மட்டுமே அனுமதிக்கிறோம். புடவை ஸ்மார்ட் கேஷுவலின் கீழ் வராது” என்று அந்த ஊழியர் பதிலளித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த  அந்த இளம் பெண், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புடவை இனி பாரம்பரிய உடை பட்டியலில் இல்லை என்று கூறினார். அசல் பாரம்பரிய உடை என்ன என்று கேட்டார். அந்தப் பெண்ணின் ட்வீட் வைரலானதை தொடர்ந்து, பலர் இது இந்திய மற்றும் கலாச்சார மரபுகள் மீதான தாக்குதல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
murugan