தளபதி 67 படத்தில் இணைந்த இளம் நடிகர் மேத்யூதாமஸ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி 67 படத்தில் இணைந்த இளம் நடிகர் மேத்யூதாமஸ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம்  தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

Thalapathy 67
Thalapathy 67

தளபதி 67 படத்தை தயாரிக்கும்  7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், முன்னதாக சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள இளம் நடிகரான மேத்யூதாமஸ் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

Mathew Thomas 67
Mathew Thomas 67 Image Source Twitter

தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய மேத்யூதாமஸ் ” லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சார் படத்தில் நடித்ததால், தமிழில் சிறந்த அறிமுகம் கேட்டிருக்க முடியாது”  என பேசியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *