thalaiva vijay

நீங்க வரணும் அண்ணா…நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவி…வைரலாகும் வீடியோ.!!

By

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இன்று பரிசு வழங்கி கௌரவிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 4,000 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விழாவிற்கு வருகை புரிந்த நடிகர் விஜய், ஆங்காங்கே மாணவர்களுடன் அமர்ந்து உரையாற்றினார். அதன்பிறகு பரிசுகளை வழங்கி மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரையையும் வழங்கினார்.

இந்த நிலையில், தற்போது விஜயிடம் பரிசு வாங்கிய மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விழாவின் மேடையிலே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார். மேடையில் பேசிய அந்த மாணவி ” நான் மதுரையில் இருந்து வருகிறேன். எனக்கு விஜய் அண்ணாவை மிகவும் பிடிக்கும். அவருடைய படங்கள் எனக்கு எல்லாமே பிடிக்கும்.  அவருடைய படங்களில் என்னை மிகவும் பாதித்தது ஒரு படம் இருக்கிறது. ஒரு வாக்கு  பற்றி எவ்வளவு தெளிவாக கூறவேண்டுமோ அதை தெளிவாக அந்த படத்தில் கூறியிருப்பார்.

என்னுடைய வாக்கு மதிப்பாக இருக்கவேண்டும் என்றால், அடுத்த ஆண்டு அரசியலில் விஜய் அண்ணா வரவேண்டும். இந்த துறையில் மட்டுமில்லை விஜய் அண்ணா நீங்க எல்லா துறையிலும் கில்லியாக இருக்கவேண்டும். நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் அண்ணா எங்களுடைய வாக்கை வேல்யூவாக நீங்கள் மாற்றவேண்டும். எங்களை மாதிரி ஏழைகளுக்கு உங்களுடைய கையை கொடுத்த மாதிரி எல்லாருக்கும் தனி ஒருவனா இல்லாமல் எங்களுடைய தலைவனா வரணும் என்று ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார். இவர் பேசிய அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Dinasuvadu Media @2023