நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான், பாட்டியாலாவின் மகாராஜா அல்ல – காங்கிரஸ் எம்.பி. பார்த்தப் சிங் பஜ்வா!

நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான் பாட்டியாலாவின் மகாராஜா போல நடந்து கொள்ளாதீர்கள் என அம்மாநில காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதல்வருக்கும் எம்.பிக்கும் இடையே தற்பொழுது சில உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள காங்கிரஸ் எம்பி பார்த்தப் சிங் பஜ்வா, முதல்வர் அம்ரரீந்தர் சிங் ஒரு மகாராஜா போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஜனநாயகத்தை நம்புகிறவர் தானா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்; பாட்டியாலாவின் மகாராஜா போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார். இதன் பின்பு சண்டிகரில் டிஜிபிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் எனது பாதுகாப்பிற்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் பஞ்சாப் மாநில முதல்வரும் டிஜிபியும் தான் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

author avatar
Rebekal