நீங்க ரொம்ப லேட்டுங்க, இது ஓல்ட் ட்ரென்ட்.! ஆண்ட்ரியாவின் வீடியோவிற்கு கமென்ட் அளித்த நெட்டிசன்கள்.!

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட டல்கோனா காஃபி வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல தரப்பில்

By ragi | Published: Jun 03, 2020 06:22 PM

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட டல்கோனா காஃபி வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல தரப்பில் கமென்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. மேலும் இவர் பல இசை கச்சேரிகளும் நடத்தி வருகிறார். அவர் மேடையில் ஆடி கொண்டே பாடுவதாலையே பல பேரை கவர்ந்தவர். பாடகியாக அறிமுகமாகி தற்போது அவரது நடிப்பு திறமையால் சிறந்த நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வடசென்னை படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் தற்போது கவர்ச்சி வேடங்களே அதிகம் வருவதாக கூறப்படுகிறது,. தற்போது இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மேலும் சிபியின் வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வீடியோவையும், உடற்பயிற்சி வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆண்ட்ரியாவின் யோகா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா நெஸ்கஃபே சன்ரைஸ் வைத்து டல்கோனா காஃபி செய்து, தரதாரரராரா புதிய சன்ரைஸ் என்று பாடியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ரோஸ்மில்க்கே டல்கோனா காஃபி குடிக்கிறதே, அடடே ஆச்சரியக்குறி என்றும், நீங்க ரொம்ப லேட் இது எல்லாம் ஓல்ட் ட்ரென்ட் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

 

Step2: Place in ads Display sections

unicc