,

நீங்க வேற லெவல்… வருண் சக்கரவர்த்தி செய்த தரமான சம்பவம்…வைரலாகும் வீடியோ.!!

By

TNPL Varun Chakravarthy

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி நடப்பாண்டில் அருமையாக செயல்பட்டார் என்றே கூறலாம். இந்நிலையில், ஐபிஎல் சீசன் முடிந்துள்ள நிலையில், அவர் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரில்  திண்டுக்கல்  அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பந்து வீசி மொத்தமாக 3 விக்கெட்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி மாஸ் காட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் மொத்தமாக 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தியுள்ளார்.  இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த பலரும்  நீங்க வேற லெவல் கூறி வருகிறார்கள்.

மேலும், நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 121 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 14.5 ஓவரில் 122 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.