கதையின் நாயகன் யோகிபாபுவின் அடுத்த படம்! 50/50 காதல் மோதல் அப்டேட்!

காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருந்த தர்மபிரபு ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான கூர்கா நல்ல வசூலை பெற்றது.

தற்போது மீண்டும் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த வரும் திரைப்படம் 50/50 காதல் மோதல், இந்த படத்தினை கிருஷ்ணா சாய் இயக்கி வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகியள்ளது. விரைவில் இப்பட டிசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.