பிரபல இயக்குநரின் தயாரிப்பில் ஹீரோவாக யோகிபாபு.!

பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது  நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதில் தர்மபிரபு, குட்கா, கோலமாவு கோகிலா போன்ற படங்களை கூறலாம் . தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும், தனுஷின் கர்ணன் படத்திலும் நடிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது இவர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படமாக உருவாகவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஷான் என்பவர் இயக்குகிறார். மேலும் இதை பிரபல இயக்குநரான பா. ரஞ்சித் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.