யோகாவின் தாயகம் நேபாளம் தான்; இந்திய அல்ல – நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து!

யோகா உருவானது நேபாளத்தில் தான் எனவும், இந்தியாவில் அல்ல எனவும் நேபாள நாட்டின் பிரதமர் சர்மா ஒலி அவர்கள் தெரிவித்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி நேபாளத்தில் உள்ள பிரதமர் மாளிகையில் நடைபெற்ற உலக யோகா தினத்தில் பிரதமர் சர்மா ஒலி அவர்கள் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர் யோகாவின் பிறப்பிடம் இந்தியா அல்ல, நேபாளம் தான் என கூறியுள்ளார். ஏனென்றால் யோகா தோன்றிய போது இந்தியா ஒரு நாடாகவே இல்லை பல ராஜ்ஜியங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கடவுள் சிவபெருமானே முதன்முதலாக 1500 வருடங்களுக்கு முன்பதாக யோகாவை கற்பித்தார் என்பது நம்பிக்கை எனவும் பதஞ்சலி மகரிஷி யோகா சித்தாந்தத்தை மேம்படுத்தி அதன் பின்பு அவரை முறைப்படுத்தினார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த ஒரு ஜாதி மதத்துக்கு யோகா சொந்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ள அவர், கிரிகோரியன் நாட்காட்டி மிக நீண்ட நாளான ஜூன் 21 அன்று சிவபெருமான் யோகா தவம் இருந்ததாக நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தான் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதியை அறிவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal