நேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசே தொடரும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

By balakaliyamoorthy | Published: May 22, 2020 06:53 PM

அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

நேற்று, இன்றும், நாளையும் அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் பணியாற்றி வருகிறது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ளனர். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் அதிமுக அரசுக்கு உண்டு என்று கூறியுள்ளனர். அதிமுக அரசே தொடந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc