ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா.!

யாஷிகாவின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

By ragi | Published: Jun 26, 2020 07:30 AM

யாஷிகாவின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனையடுத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இரட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதனால் பிரபலமான யாஷிகா தொடர்ந்து பல கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார். தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc