நாளை கரையை கடக்கும் “யாஷ் புயல்” – இந்திய வானிலை மையம் கணிப்பு..!

நாளை கரையை கடக்கும் “யாஷ் புயல்” – இந்திய வானிலை மையம் கணிப்பு..!

யாஷ் புயல் நாளை கரைய கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல்  கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கீ.மீவேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் கனமழை பெய்திவருவதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் யாஷ் புயல் எதிரொலியால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீன்வள துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube