யாரெல்லாம் சைவ உணவு மட்டும் உண்கிறீர்கள்? அவர்களுக்கு ஒரு ஆபத்து.!

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு. 

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக  பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை.

அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்று சைவ உணவை சாப்பிட்டு வரும்மக்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் சைவ உணவு முறை சாப்பிடுவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு முறை என்பது மிகவும் நல்ல உணவு முறை தான். பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்றுகூறுவார்கள்.

இந்நிலையில் இந்த உணவு முறையால் பல சத்து குறைபாடுகள் ஏற்படுகிது அதிலும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு,இதய நோய், வளர்சிதை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்றுநினைத்து சைவ உண முறைக்கு நிறைய மக்கள்உணவு முறை மாற்றுகிறார்கள்.

பால்,காய்கறிகள்,பழங்கள் போன்ற சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவர்களுக்கு ஊட்டட்சத்து குறைபாடுகள் ஏற்படும். சைவ உணவு முறையை உண்பவர்களுக்கு கலோரி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாம் . சைவ உணவு பின்பற்றுவர்க்ளுக்கு இல்லாத ஊட்டசத்துகள் கால்சியம்,புரதம்,வைட்டமின் டி,இரும்பு வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் மீன் மற்றும் இறைச்சி உண்ணாதவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். மேலும் முட்டை மற்றும் பால் உண்ணாதவர்களுக்கு கூட இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது.

அசைவ உணவை உண்பவர்களை காட்டிலும் சைவ உணவு உண்பவர்களுக்கு 30% பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.மேலும் மூளையில் பாதிப்பு கோலின் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கும் சில செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஊட்டசத்தாகவும் சைவ உணவில் கோலின் என்பது குறைவாக இருக்கும்.அதனால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம் .

மேலும் தலைமுடி உதிர்தல் அதிகரிக்கும் ஏன்னென்றால் அசைவ உணவுகளில் வைட்டமின் பி,இரும்புசத்து, துத்தநாகம் போன்றவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவு உண்பதினால் மனச்சோர்வு ஏற்படுவதாகத் கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.