இந்தியாவில் உற்பத்தி உச்சத்தில் சீ ர்நடைபோடும் யமஹா..!புதிய மைல்கல்

இந்தியாவில் உற்பத்தி உச்சத்தில் சீ ர்நடைபோடும் யமஹா..!புதிய மைல்கல்

இந்தியாவில் பைக் உற்பத்தியில் பிரபலமான நிறுவனம் யமஹா ஆகும்.இது இந்தியாவில் 1985 ஆண்டு தொடங்கப்பட்டது.தற்போது ஒரு கோடி மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து புதிய  மைல்கள் உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் உற்பத்தி மையங்களாக இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை செயல்படுகிறது.இதில் சென்னை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related image

இந்நிறுவனம் எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 ஒரு கோடி யூனிட்டாக  வெளியிடப்பட்டது.இவை எல்லாம் சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான நிலையில் புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா  நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் வாகன உற்பத்தியில் ஒரு யூனிட்களில் 80 சதவிகிதம் வாகனங்கள் எல்லாம்  யமஹாவின் சர்ஜாபூர் , ஃபரிதாபாத் ஆலைகளில் இருந்து வெளியானவை.மீதம் உள்ள  வாகனங்கள் எல்லாம் சென்னை உள்ள யமஹா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை.இது குறித்து பேசிய  அந்நிறுவனத்தின் இந்தியா குழும தலைவர் மோடோஃபுமி ஷிதாரா பின்வருமாறு கூறினார்.

Related image

அதில் நாடு முழுவது எங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.எங்கள் நிறுவனம் கடந்து வந்த பாதை மிகவும் சசுவாரஸ்யம் தான்.இந்த மைல்கள் எங்கள் வாகனங்களின் அழகு மற்றும் கவர்ச்சி போன்றவை மற்றும் அதனுடைய தட்டுப்பாடு,பிரபலத்தன்மை தொடர் வளர்ச்சிக்கு  காரணமாக அமைத்துள்ளது.என்று கூறினார்.

Related image

யமஹா நிறுவனம் 1985-2019 34 ஆண்டுகள்  கடந்து வந்துள்ளது.1999 ஆம் ஆண்டு மட்டும் 10 லட்சம் உற்பத்தியை கடந்தது.அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு  அதாவது 13ஆண்டுகள் கழித்து 50 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்தது.தற்போது ஒரு கோடி யூனிட்கள் உற்பத்தி மைல்கல் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *