#Breaking:மக்களை அச்சுறுத்திய ‘யாஸ் புயல்’ கரையைக் கடந்தது..!

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் யாஸ் புயல் கரையை கடந்தது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,தற்போது பாலசோர் பகுதியில், புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளது.

இருப்பினும்,கரையைக் கடந்த யாஸ் புயல் தற்போது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து,வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு படிப்படியாக பலவீனமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனுடைய தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.