வங்கம்-ஒடிசா வை சுக்குநூறாக்கிய யாஸ் புயல் 4 பேர் பலி

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில்,யாஸ் புயலால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இறந்தவர்களில் ஒடிசாவில் மூன்று பேர் மற்றும் ஒருவர்  மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.

உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனமான பி.டி.ஐ இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக  அறிவித்தது – ஒடிசாவின் கியோன்ஜார் மற்றும் பாலசூரில் தலா ஒருவர் – மரங்கள் அவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக  உறுதிப்படுத்தல் இல்லை.

மயூர்பஞ்சில் மற்றொரு வயதான பெண் தனது வீடு இடிந்து விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில் , ஆரம்பத்தில் மீட்கப்பட்ட ஒருவர் பின்னர் “தற்செயலாக” இறந்தார் என்று கூறினார்.

author avatar
Dinasuvadu desk