MIUI 12.5 update: இனி bloatware தொல்லை இல்லை.. அப்டேட் கிடைக்கும் போன்களின் பட்டியல் இதோ!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் மி 11 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய போது MIUI 12.5 அப்டேட்டையும் அறிமுகப்படுத்தியது. MIUI 12 உடன் ஒப்பிடும்போது, 12.5 வேகமானது, சிக்கனமானது என்று சியோமி நிறுவனம் தெரிவித்தது.

இதன் மெமரி யூசேஜ் 20% குறையும் எனவும், 15% வரை power consumption குறையும் என்று சியோமி குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் பெரிதாய் பேசப்படுவது என்னவென்றால், iOS-ஐ விட கம்மியான bloatware அப்ளிகேஷனை கொண்டுள்ளது. உங்களின் பழைய ரெட்மி, மி மொபைல்களில் ஏற்கனவே bloatware அப்ளிகேஷன் இருந்தால், அதனை அன்-இன்ஸ்டால் செய்துகொள்ளலாம் என்றும் சியோமி தெரிவித்துள்ளது. ஆனால் விளம்பரங்கள் குறித்து எந்தவிதமான தகவல்களை இதுவரை கூறவில்லை.

இந்தநிலையில், MIUI 12.5 வெளியாகும் தேதியையும், வெளியீட்டு விவரங்களையும், MIUI 12.5 அப்டேட்டை பெறும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முதற்கட்டமாக வெளிவரும் என்றும், அப்பொழுது Mi 11, Mi 10T, Mi 10T Pro, Mi 10, மற்றும் Mi 10 Pro ஆகிய மொபைல்கள் பெறும் என்று தெரிவித்தது.

இரண்டாம் கட்ட அப்டேட், Mi 10 Lite 5G, Mi 10T Lite, Mi Note 10 Pro, Mi Note 10, Mi Note 10 Lite, Redmi Note 9T, Redmi Note 9 Pro, Redmi Note 9S, Redmi Note 9, Redmi Note 8 Pro, மற்றும் Redmi 9 ஆகிய மொபைல்களுக்கு ஜூன் மாதத்திற்கு பின் கிடைக்கும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.