#Wow:108 அடி உயர அனுமான் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

அனுமான் ஜெயந்தியினை முன்னிட்டு குஜராத்தின் மோர்பியில்,காலை 11 மணிக்கு,அனுமானின் 108 அடி உயர சிலை திறக்கப்படும் என்றும்,இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றதில் தான் பெருமைப்படுவதாகவும் ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,அனுமான் ஜெயந்தியான இன்று குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். Hanumanji4dham திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் 4 திசைகளில் 4 அனுமான் சிலைகள் அமைக்கும் முயற்சியில் இது இரண்டாவது சிலை ஆகும்.

முதலாவது அனுமான் சிலை கடந்த 2010 ஆண்டு இந்தியாவின் வடக்கு பகுதியான சிம்லாவில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில்,3 வது சிலை தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என்றும்,4-வது சிலை மேற்கு வங்கத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.