மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

]
படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், பாகுபலியை மிஞ்சியதாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், படம் வெளியாக்க 3 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இதனையடுத்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
In three days #PonniyinSelvan2 has crossed more than 150 crores GBOC at the worldwide box office. While in the first part itself the makers have earned handsome profits, now they are reaping more money in this summer holiday season. Phenomenal blockbuster for @LycaProductions… pic.twitter.com/gWndb427oF
— Rajasekar (@sekartweets) May 1, 2023
அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.