கொரோனாவின் மோசமான தாக்கம் இனி தான் வரக்கூடும்.. கொரோனவுடன் வாழ வேண்டும்- உலக சுகாதார அமைப்பு!

கொரோனாவின் மோசமான தாக்கம் இனி தான் வரக்கூடும்.. கொரோனவுடன் வாழ வேண்டும்- உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை எனவும், மக்கள் கொரோனவுடன் வாழவேண்டும், வேற வழியே இல்லை என உலக சுகாதார துறை அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 10,592,134 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5.14 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், சீனாவில் முதலில் கொரோனா தொற்று உறுதியான நாள் முதல் இன்று வரை உலகளவில் இதுவரை 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இந்த வைரஸின் தாக்கம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையை தொடர விரும்புகிறோம் என தெரிவித்த அவர், இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதன் தாக்கம் வேககமடைந்துள்ளது. மேலும், கொரோனாவின் மோசமான தாக்கம் இனிதான் வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் உலக மக்கள் கொரோனவுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா பரவுவதற்கான காரணத்தை கண்டறிய, சீனாவுக்கு இந்த வார இறுதிக்குள் குழுவினர் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Join our channel google news Youtube