அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

நாளை மறுநாள் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான பல்வேறு புதிய  கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது.

இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரதார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டு தல ஊழியர்கள் மூலம் நடத்திவதற்கு தடையில்லை. இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்