உலகளவில் 60 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?

கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. 

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,033,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 366,890 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் புதிதாக 125,511 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, மேலும் 4,872 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது மருத்துவமனையில் 3,003,853 பேர் உள்ளனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,656,144 ஆக அதிகரித்துள்ளது. 

author avatar
Rebekal