உலகின் வயதான மனிதர் என்கிற பட்டத்தை வைத்திருந்த மனிதர் அப்பாஸ் இலீவ் மரணமடைந்தார். இவர் ரஷியா நாட்டை சேர்ந்த இங்குசேத்தியாவை சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1896 ஆகும். இவர் 1917 முதல் 1922 வரை ரஷியா ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

இவர் 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் டிராக்டர் ஒட்டி வாழ்ந்து வருகிறார். இவர் பச்சை காய்கறிகளையும், பாலையும் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு புகை மது என எந்தவித பழக்கமும் இல்லை. மேலும் 11 மணிநேரம் தினமும் தூங்கும் பழக்கமுடையவர்.

இவர் உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை பக்கம் கூட சென்றதில்லையாம்.இவருக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

DINASUVADU