இரண்டாம் உலகப்போரின் புகழ்பெற்ற பிரிட்டிஷ் துப்பாக்கி தயாரிப்பாளர் – உ.பி.யில் உற்பத்தியை தொடங்க முடிவு.!

இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதங்களை வழங்கிய பிரிட்டிஷ் துப்பாக்கி நிறுவனம் வெப்லி & ஸ்காட், உத்தரபிரதேசத்தின் ஒரு உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளனர்.

உலகின் மிகப் பழமையான ஆயுத உற்பத்தியாளர்களில் ஒருவரான வெப்லி & ஸ்காட், உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிகளைத் உத்தர பிரதேச மாநிலத்தில் ஹார்டோய் நகரில் ஒரு உற்பத்திப் பிரிவை அமைக்கவுள்ளார். இந்த நிறுவனம் இரண்டாம் உலகப் போரின்போது பல நாடுகளுக்கு துப்பாக்கிகளை வழங்கியதில் பிரபலமானது.

இதுகுறித்து பிரபல ஊடகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முதல் உலகளாவிய துப்பாக்கி நிறுவனமாக வெப்லி & ஸ்காட் மாறும் என்றும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏஜென்ட் லக்னோவை தளமாகக் கொண்ட சியால் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்து உத்தரபிரதேசத்தில் இதனை அமைக்கப்பவுள்ளார்கள். ஆயுத உற்பத்தி நவம்பரில் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில், .32 ரிவால்வர் உற்பத்தியுடன் செயல்பாடுகளைத் தொடங்கி, இறுதியில் துப்பாக்கிகள் மற்றும் ஷாட்கன்களின் உற்பத்தியையும் தொடங்கும்.  இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வெப்லி & ஸ்காட்டின் உரிமையாளர்களை மேற்கோள்கட்டியுள்ளது. ஏனெனில், பிரிட்டிஷ் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்திலும் உற்பத்தித் தயாரிப்புகளை தேர்வு செய்துள்ளது என்பதாகும். சியால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த பின்னர் 2019 ஆம் ஆண்டில் துப்பாக்கி தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்