உலகின் பணக்கார விளையாட்டு வீரர் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் உலக சாம்பியன் லெவிஸ் ஹாமில்டன்....

உலகின் முன்னணி பணக்கார விளையாட்டு வீரர்களின்  பட்டியலை சன்டே டைம்ஸ் என்ற

By kaliraj | Published: May 15, 2020 08:15 AM

உலகின் முன்னணி பணக்கார விளையாட்டு வீரர்களின்  பட்டியலை சன்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிக்கையின் படி, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் உலக சாம்பியன் பட்டம் வென்ற லெவிஸ் ஹாமில்டன், முதலிடத்தை பிடித்துள்ளதாக சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இவரது மொத்த சொத்து மதிப்பு   2 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இவர் உலகின் பணக்கார விளையாட்டு வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல், உலகின்  இரண்டாவது பணக்கார விளையாட்டு வீரர் என்ற இடத்தை கோல்ஃப் விளையாட்டு வீரர்  ரோரி மெக்கல்ராய் பிடித்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் இடத்தை கால்பந்து வீரர் கெராத் பேல் பிடித்துள்ளார் என அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc