பள்ளிகள் திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி கருத்து..!

பள்ளிகளை திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டு வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் போன்றவை திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி கருத்து ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர், அதிக அளவிலான பாதுகாப்புடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உலகில் பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை திறப்பது குறித்து மிகுந்த கவனம் தேவை. எளிதாக சமூக பரவல் நடைபெறும் இடமாக பள்ளிகள் இருக்கின்றன. அதனால் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின்பே திறக்க வேண்டும்.

மேலும், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.