இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் – இளவரசர் சார்லஸ்.!

இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் – இளவரசர் சார்லஸ்.!

இங்கிலாந்து ஏற்பாடு செய்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று வரி நடைபெறும் மாநாட்டில் நேற்று முன்தினம்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி இந்தியா, பல சவால்களை கடந்த வரலாற்றை கொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் உள்ளது. மேலும்,  சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசிய அந்நாட்டு இளவரசர் சார்லஸ், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை குறித்து பேசினார். அப்போது, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை மக்கள் பார்க்க வேண்டும். நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் பற்றி நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். தங்களை புதுப்பிக்க முயற்சி செய்யும் போது இந்தியாவின் பண்டைய அறிவை உலகம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரமாகும். இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது.

அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. இந்தியாவில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காக முன்னணியில் பணியாற்றி வரும் இந்திய புலம்பெயர்ந்தோர்,  இங்கிலாந்து ஆசிய அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களுடன் சமூக நிதியை பயன்படுத்துவதற்கு, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகின்றது என கூறினார்.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube