கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது!

கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது.

கங்கை நதி இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதி இயற்கை மாசாலும், மக்களின் கவனக் குறைவாலும் நதி பல வகைகளில் மாசடைகிறது. அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் மூலம், நதியை  மாசு இல்லாத, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதை உறுதி செய்ய முயல்கிறது.

இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதியைப் புத்துயிர் பெற செய்யும் வகையில், நமாமி கங்கே திட்டத்திற்கான ஆதரவை அதிகரிக்க, உலக வங்கியும் இ,ந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.