தொடர்ந்து பச்சை கரு முட்டையிட்டு வரும் அதிசய கோழிகள்.! ஆராய்ச்சியை தொடங்கிய விஞ்ஞானிகள்!

கேரள மாநிலத்தில் மலாபுரத்தில் ஒருவரது கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை கருவுடன்

By manikandan | Published: May 22, 2020 10:40 PM

கேரள மாநிலத்தில் மலாபுரத்தில் ஒருவரது கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை கருவுடன் முட்டையிட்டு வருகின்றன. அதனால், விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் வசித்து வரும் ஏ.கே.ஷிஹாபுதீனின் என்பவரது கோழி பண்ணையில் இருக்கும் குறிப்பிட்ட ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளை தொடர்ந்து இட்டு வருகின்றன. 

இந்த சம்பவம் குறித்து ஏ.கே.ஷிஹாபுதீனின் கூறுகையில், ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு கோழி மஞ்சள் பச்சை கரு முட்டையிட்டது. பயந்து போய் அதனை நாங்கள் உட்கொள்ளவில்லை. அந்த பச்சை கரு முட்டை குஞ்சு பொரித்து, தற்போது அந்த கோழிகளும் பச்சை கருவுடன் முட்டையிட்டு வருகின்றன.

இந்த நிகழ்வு குறித்து, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கே.வி.ஏ.எஸ்.யூ) விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த ஆய்வில் உள்ள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், கோழி தீவனத்தில், ஏதேனும் கூடுதல் ஊட்டச்சத்து கொடுத்தால் இந்த மாதிரி மஞ்சள் கரு மாற்றம்காணப்படும். ஆனால், ஏ.கே.ஷிஹாபுதீனின் தனது கோழிகளுக்கு எந்தவித கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதனால், பச்சை கரு முட்டையிடும் இரு கோழிகளை விஞ்ஞானிகள் வளர்த்து வருகின்றனர். அந்த கோழிகளுக்கு சாதாரண கோழித்தீவனங்களை கொடுத்து வருகின்றனர். அதன் மூலம் பச்சை கரு நிறம் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் ஆராய்ச்சி முடிவுகள் ஆராய மூன்று வாரங்கள் வரை தேவைபடலாம் என கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc